இறக்காமப் பிரதேசத்தைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்று . இங்கு முஸ்லிம்கள் பெரும் பான்மையாகவும், பெளதர்கள் மற்றும் தமிழர்கள் சிறுபான்மையாகவும் சக வாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.
கடந்த 2013 ம் ஆண்டின் இறக்காமப் பிரதேசத்தின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 15,476 முஸ்லிம்களும், 997 பெளதர்களும் 346 தமிழர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் . தற்போது 17.000 பேரையும் தாண்டியுள்ளது. இறக்காமப் பிரதேசத்தில் இறக்காமம் , வரிப்பத்தான்சேனை , வட்டுச்சேனை கிராமம் , குடுவில் , அமிரலி புரம் , நல்லதண்ணி மலை , மஜீட்புரம், சேகு ஒலி புரம், அரபா நகர் , ஹுசைனியா புரம், 10 A கிராமம் , சபா நகர் , 11A கிராமம் , முகைதீன் கிராமம் , ஜபல் நகர் , மதீனா புரம் என்று சுமாராக 16 கிராமங்களில் முஸ்லிம்கள் செறிவாகவும் கல்மடு , மலையடி , இலுக்குச்சேனை , நியுகுண போன்ற 4 கிராமங்களில் பெளதர்கள் செறிவாகவும் மாணிக்கமடு கிராமத்தில் தமிழர்கள் செறிவாகவும் வாழ்ந்து வருகின்றார்கள் .
இப்படி சமூக ஒற்றுமையுடன் வாழும் இறக்காமப் பிரதேச வாசிகளின் அன்மைக்காலப் போகும் மிகவும் கவலைக்கிடமாக மாறி வருகின்றது. இன்று பெயரளவில் பிரதேச வைத்திசாலை என்று இருக்கின்றது ஆனால் மக்கள் போதிய மருத்துவ வசதின்றி பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உயிருக்காகப் போராடி அவதிப்பட்டுவருபவர்களை அம்பாரை அரச பொது மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள் . காரணம் இங்கு அவசர சிகிச்சைப் பிரிவும் அதற்கான வைத்தியர்களும் இல்லாமையினால். அதேபோல் பற்சிகிச்சைக்காக வருவோர்கள் சிகிச்சை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் போகின்றார்கள். காரணம் பற்சிகிச்சைக்கான தரமான வைத்தியர்களும் அதற்கான வைத்திய உபகர்ணங்களும் இல்லாமல்.
மேலும் போதிய தங்குமிட வசதிகள் இல்லை தரம் வாய்ந்த போதிய தாதிமார்கள் இல்லை போதிய வைத்தியர்கள் இல்லை அதேபோல் மக்களுக்குத் திருப்திகரமான சுற்றுப்புற சூழல்கள் இல்லை. இப்படி இறக்காமப் பிரதேச மக்கள் பெரும் அவதிப் படுகின்றன். இப்படி நிலமை இருக்க இன்று பெயரளவில் பிரதேச வைத்தியசாலையாக மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமப் பிரதேசத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கும் மாகான சபைக்கும் தெரிவாகும் அரசியல் பிரிகர்கள் வருகின்றார்கள் ஊர் அபிவிருத்தி என்று பேசும் போது ஒரு மாட்டையும் , மூன்று தகடுகளையும், தபால் நிலையத்திற்கு ஒரு துவிச்சக்கர வண்டியையும் கொடுத்துவிட்டு பத்திரிகைகளிலும் இலத்திரணியல் ஊடகங்கிலும் தலைப்புக்கள் இடுகின்றார்கள் இறக்காமப் பிரதேச அவபிருத்திக்கு அமைச்சர் ஒரு கோடி நிது ஒதுக்கீடு ........ என்று.
இப்படி நாடோடி அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் எமது இறக்காமப் பிரதேசத்தையும் பந்தாடுகின்றார்கள் . கவலை என்னவென்றால் கந்தூரி உணவு ஒவ்வாமையினால் இறக்காமப் பிரதேச மற்றும் அக்கறைப்பற்று பிரதேச மக்களும் பிரதேச வைத்திய சாலைகளில் உயிருக்காக அவதிப்படுகின்றார்கள் சில அரசியல் பிரமுவர்கள் தன்னையும் தனது வருகையையும ஊடகங்களில் பிரபல்யப் பபடுத்துகின்றார்கள். இதுதான் எமது சாக்கடை அரசியல்வாதிகள் . எனவே இனியாவது எமது இறக்காமப் பிரதேச முஸ்லிம் விழிக்கவில்லை என்றால் நாங்கள் மூளையுள்ள முட்டாள்கள் .
எனவே அரசு இறக்காமப் பிரதேசிகளின் இந்தப்பிரச்சினைக்குத் தீர்ப்பு தரவேண்டும் . அதேபோல் எங்களது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்துவதில் முதலமைச்சர் தொடக்கம் மாகாண சுகாதார அமைச்சர் வரை இந்த விவகாரத்தில் கரிசினை செலுத்த வேண்டும் .
எதிர்கால வாக்கு எங்கள் கையில்.
இதை எமது அனைத்து பிரதேச வாசிகளும் கவனத்திற் கொண்டு உங்களின் முக நூலில் பகிர்ந்து கொள்ளுங்கள் .
கட்டுரை
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )