அரசியலுக்குள் சமயத்தை நுழைக்க வேண்டாம்
முஸ்லிம் பெண்கள் பேரவையின் தலைவியும் கொழும்பு மாநகரசபைத் தேர்தல் வேட்பாளருமான ஜிஹான் ஹமீட் வழங்கிய விசேட நேர்காணல்- இது வேறு தளத்துக்கு வழங்கப்பட்ட நேர்காணல் -நன்றி
(நேர்காணல்: பிறவ்ஸ் முஹம்மட்)
கேள்வி: நீங்கள் ஏன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கிறீர்கள்?
பதில்: ஏற்கனவே இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலும்இ முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவினாலும் முடிக்க முடியாத யுத்தத்தை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டுவந்தார். சர்வதேச அழுத்துக்கு மத்தியிலும் பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாமல் செய்தார்.
யார் வேண்டுமானாலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருப்பார்கள் என்று இன்று இப்போது கூறுகிறார்கள். இது ஒரு நன்றிகெட்ட தனம். யுத்த வெற்றியை யாரும் மறுக்கவே மறைக்கவோ முடியாது. இந்த ஆட்சியில்தான் முஸ்லிம்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். சுதந்திரமான ஒரு நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்து வாழவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே நான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகிறேன்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெறுகின்றன?
பதில்: இப்போது புதிதாக முளைத்துள்ள பொதுபல சேனாவினால்தான் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பொதுபல சேனாவை கட்டுப்படுத்தவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு சரியானதொரு தீர்வையோ வழங்கவில்லை என்று முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் கோபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பெரும்பான்மையின மக்கள் செறிந்துவாழும் நாட்டில் அவர்களது மதகுருமார்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த பொதுபல சேனா. இவர்கள் பள்ளிவாசல்கள் மீதும் கிறிஸ்த தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடாத்தி வருகின்றனர். இவர்களை திடீரென இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் நிலைமைகள் இன்னும் மோசமாக இருக்கும் என்பதினாலேயே ஜனாதிபதி பொதுபல சேனா விடயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார். ஆனால்இ பொதுபல சேனாவுக்கும் அரசாங்கத்தும் எவ்வித தொடர்புகளும் இல்லை.
கேள்வி: சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை என்று வரும்போது நாட்டு ஜனாதிபதி அதனை தடுத்த நிறுத்தவேண்டும் தானே?
பதில்: ஜனாதிபதியின் பாரியார் கிறிஸ்தவ மதத்திலிருந்து பெளத்த மதத்துக்கு மாறிவந்தார். பொதுபல சேனா கிறிஸ்த தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்கள் தடைசெய்திருக்கலாம் தானே. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. அவர்களால் பொதுபல சேனாவை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. பெரும்பான்மை சமூகங்கள் நிறைந்துவாழும் நாட்டில் அவர்களுடைய ஒரு சமய இயக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பது மேலும் வன்முறைகளுக்கு தூபமிடும்.
எங்காவது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் ஏற்பட்டால்இ மஹிந்த ராஜபக்ஷ அதனை உடனடியாக கட்டுப்படுத்தியிருக்கிறார். கலவரம் வெடிக்காமல் பாதுகாத்திருக்கிறார். சமயங்களை மதிக்கின்ற மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்கள் மீது தனியான மரியாதை வைத்திருக்கிறார். அவர் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்.
கேள்வி: பேருவளை,தர்காநகர் அசம்பாவிதங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லையே?
பதில்: அங்கு நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் வருத்ததுக்குரியவை. இது மனிதாபிமானமற்ற செயற்பாடு. ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியில் நடைபெற்றதுபோல கலவரங்கள் மனிதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படும்வரை ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் உடனடியாக அதைக் கட்டுப்படுத்தியது.
குறுகிய காலத்துக்குள்ளேயே பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் இந்த அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுத்தது இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பொதுபல சேனா எங்களுக்கு அடிக்கிறார்கள். அவர்களை கைதுசெய்யுங்கள். நீங்கள் இதற்கு இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டார்கள். சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் சொல்வது போன்று அவர் செய்யவில்லை.
ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளைஇ இளைய பிள்ளைக்கு அடித்தால் தந்தையிடம் சென்று மூத்தவர் அடித்துவிட்டார். நீங்கள் அவருக்கு அடியுங்கள். அவரைப் பிடித்து சிறையில் அடையுங்கள். இல்லையென்றால் நீங்கள் எனக்கு அப்பா இல்லை. நான் வேறொரு அப்பாவை தேடிக்கொள்கிறேன் என்ற நிலைமையில்தான் இந்தப் பிரச்சினை உள்ளது. முஸ்லிம் சமூகம் இன்னும் பொறுமையாக செயற்பட்டிருக்கலாம். எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம்.
கேள்வி: பொதுபல சேனாவை நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?
பதில்: பொதுபல சேனா வந்தபின்னர் நாட்டில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. சாதாரணமாக முஸ்லிம் ஒருவர் சிங்களவருடன் முரண்பட்டால் அதனை பூதாகரப்படுத்தி இனக்கலவமாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். இவர்களது இலக்கு மிகவும் வித்தியாசமானது. அவர்களது ஆட்டம் இப்போது அடங்கியிருக்கிறது. இறைவனின் துணையால் இவர்களது சதித்திட்டங்கள் இல்லாமல் போகவேண்டும்.
பொதுபல சேனாவின் செயலாளரின் செயற்பாடுகளினால் பெளத்தத்தை நேசிக்கின்ற சிங்கள மக்களும் அதிருப்பதியடைந்துள்ளனர். பெளத்த பிக்கு போன்று இவரது செயற்பாடுகள் இல்லை. பொதுபல சேனா அழிந்துவிட வேண்டும் என்று பிரார்த்திப்பவர்களின் நானும் ஒருத்தி.
கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிக்கு சென்றுள்ளதால் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்துமா?
பதில்: முன்னாள் அமைச்சர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய இருவரும் முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான பிரதிநிதிகள். முஸ்லிம் சமூகத்துக்காக அரசாங்கத்திலிருந்து குரல்கொடுத்தவர்கள். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெற்றபோது அதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்இ அப்போதே இவர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருக்கலாமே. ஏன் ஜனாதிபதி தேர்தல் வரும்வரை இதற்காக காத்திருந்தார்கள்.
இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களிலுள்ள வாக்குளை மாத்திரமே எதிரணிக்கு கொண்டுசெல்ல முடியும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் இவர்களால் எடுத்துச் செல்ல முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம் மக்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.
கேள்வி: ஜனாதிபதியின் ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடை ஆணிவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதே?
பதில்: பொதுபல சேனா போன்ற குழுக்கள் பெண்கள் நிகாப் அணிவதை தடைசெய்யுமாறு கோரிவருகின்றனர். ஹபாயா அணிவதில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. முகத்தை மூடி நிகாப் அணிந்து கொண்டு வெளியில் செல்வதால் அவர்களை அடையாளம் காணமுடியாதுள்ளது. ஆண்களும் நிகாப் அணிந்து கொண்டு பெண்கள் போல செல்லலாம்.
சட்டவிரோத செயல்களை புரிகின்றவர்கள் கூட இன்று நிகாப் உடையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால்இ மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
கேள்வி: பொதுவேட்பாளர் மைத்திரியின் கூட்டங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதால் மக்களிடையே அனுதாப அலை ஏற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குவங்கி வீழ்ச்சியடையுமே?
பதில்: இல்லவே இல்லை. இதெல்லாம் அரசியல் விளையாட்டுகள். மைத்திரியின் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி யாரிடமும் கூறுவதில்லை. ஜனாதிபதி மீது தீவிரப் பற்றுள்ள ஒருசில ஆதரவாளர்களின் செயற்பாடுகளினால் மக்கள் குழப்பமடைய மாட்டார்கள். வாக்காளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அனுதாப அலைகளால் மக்கள் வாக்களிக்கும் காலம் மலையேறி விட்டது.
கேள்வி: மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை பெரும்பான்மையின மக்களும் விரும்பவில்லையே?
பதில்: ஜனாதிபதி பதவியேற்றது முதல் இன்றுவரை வேலை செய்துகொண்டே இருக்கிறார். யுத்த வெற்றியின் பின்னர் பலவகையான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகிறார். இவற்றை முழுமையாக செய்துமுடிக்க காலம் போதாது. அத்துடன் அவற்றை இடைநடுவில் கைவிடவும் முடியாது. எனவேஇ அவரது நீண்டகால அபிவிருத்திக்கு இன்னுமொரு பதவிக்காலத்தை தாராளமாக வழங்கமுடியும்.
கேள்வி: நாட்டின் பகுதிகளை ராஜபக்ஷ குடும்பம் ஆட்சி செய்வதாக எதிரணிகள் குற்றம்சாட்டுகிறதே?
பதில்: முன்னர் மழைகாலங்களில் கொழும்பு நீரில் மூழ்கியதுஇ ஆனால்இ இப்போது கொழும்பு எப்படி அழகாக இருக்கிறது என்று பாருங்கள். கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சர்வதேச நகரத்துக்கு ஒப்பானதாக அபிவிருத்தி செய்யப்பட்டள்ளது.
நாமல் ராஜபக்ஷஇ பஷில் ராஜபக்ஷ இவர்கள் தேர்தல்மூலம் பாராளுமன்றம் வந்தவர்கள். ஜனாதிபதியின் சொந்தங்கள் அரசியலுக்கு வரமுடியாது என்று சட்டத்தில் எழுதப்படவில்லையே. ஜனாதிபதியின் சகோதரர்கள் அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாகச் செய்வதற்கு அவர்களாகவே முன்வந்துள்ளார்கள். நாட்டின்மீது கொண்ட பற்றினால் மற்றவர்கள் ஏசினாலும் பரவாயில்லை என்று இவர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார்கள்.
கேள்வி: ஜனாதிபதியை எதிர்த்து ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டியிடுகிறார். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியுடன் இரண்டு பதவிக்காலம் வரை இருந்தார். அடுத்த தேர்தலில் ஆளும்கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரிமை அடிப்படையில் இவர்தான் காணப்பட்டார். ஆனால்இ மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிடுவதால்இ ஜனாதிபதி பதவியை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று எதிரணிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் எதிரணிக்கு சென்றது பதவிக்காகவே.
கேள்வி: பெரும்பான்மையான முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: முஸ்லிம் விரோத செயற்பாடுகள் அவர்கள் மனமுடைந்து போயிருக்கிறார்கள். இதனை ஐக்கிய தேசியக் கட்சி சாதகமாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டது. இலங்கையின் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முஸ்லிம்களின் சமயத்தை வைத்து அரசியல் பேசப்படுகின்றது. தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களுக்கு இழைப்பட்ட அநீதிகளை சொல்லிக் காட்டி அப்பாவி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது ஹராம்இ பாவம் என்றெல்லாம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இஸ்லாத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதே ஒரு பாவமான செயலாகும். நாம் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற வகையில்இ வளமான எதிர்காலத்தை தெரிவுசெய்யும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. எனவேஇ நமது வாக்குரிமைகளைப் பயன்படுத்தி நமக்கான தலைவரை தெரிவுசெய்வோம்.