Latest News
    Post views-

    தனது மகாண சபை பதவியினை பாதுகாப்பதற்காக வழக்கு தாக்கள் போவதாக குறிப்பிடுகின்றார் ஆரிஃப் சம்சுடீன் (Audio)

    கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீனை தேசிய காங்கிரசின் உறுப்புரிமையில் இருந்து நீக்கிவிட்டதாக அதன் பொது செயலாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு தெரிவித்ததன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுபுரிமையில் இருந்தும் நீக்கி விட்டதாக தனக்கு கடந்த 13.07.2016 அன்று திகதி இடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீனுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக வினவிய பொழுது தெரிவித்தார்.

    மேலும் தனது கருத்தினை தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தேசிய காங்கிரசிற்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தின் உள்ள புரிந்துணர்வின் பிரகாரமே தன்னை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கிவிட்டதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவிக்கபட்டு மாகாண சபையில் உள்ள எனது பதவியினையும் நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக எனது தரப்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றேன். ஒரு கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற நபரினை குறித்த கட்சியின் செயலாளர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதினால் மாகாண சபையினுடைய உறுப்புரிமை நீக்கப்படும் என சட்டம் கூறுகின்றது. இருந்தும் மாகாண சபையின் தேர்தல் சட்டத்தில் உள்ள 63வது சரத்தின் உபபிரிவு இரண்டின் பிரகரம் ஒரு மாத காலத்திற்குல் உறுபினரானவர் தனது பதவி நீக்கம் சட்டபூர்வமானதல்ல என மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமாக இருக்கின்றது. அவ்வாறு வழக்கு தாக்கள் செய்யப்பட்ட திகதியில் இருந்து குறித்த கட்சியின் செயலாளரினுடைய கடிதமானது இடை நிறுத்தி வைக்கப்படும். அத்தோடு வழக்கு தாக்கள் செய்யப்பட்டு ஒரு மாதகாலத்திற்குள் உறுப்பினருடைய உறுப்புரிமையானது பாதுகாக்கப்படும் என சட்டத்தில் ஒரு பிரிவு கூறுகின்றது.

    அதன் அடிப்படையிலே தனக்கு இவ்விடயத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சட்ட ஆலோசகர்களுடன் குறித்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடி வருகின்றேன். மேலும் தனக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை முனெடுத்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் இந்த நடவடிக்கையானது  தனது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களை மேலும் வலுப்பெற செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என தெரிவித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீன்.


    கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரீஃப் சம்சுடீனிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவரினால் தரப்பட்ட விரிவான விடைகளின் ஆடியோ காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது.

    ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்