அம்பாறை இக்னேசியஸ் கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று சுமார் 3 மணி அளவில் அக்கரைப்பற்று பிரதான கதத்தோலிக்க வேதவாலயத்தில் ஆராதனை செயற்பாடுகளை முடித்துவிட்டு அம்பாறை நோக்கி சென்றபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இறக்காமம் மதினாபுர பிரதான சந்திக்கருகே விபத்துக்குள்ளாகியது. இவ்வானில் சென்ற மூவர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்த எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவித்தார்.
(இறக்காமம் நிருபர் எஸ்.எம்.சன்சீர்)