தி/ கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி இம்முறை க.பொ.த உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றி வெளியேறும் மாணவர்களுக்கு உயர் தரம் கல்வி பயிலும் மாணவர்களால் கௌரவிக்கும் நிகழ்வு 22.07.2016 இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இக் கல்லூரி மாணவர் செல்வன் எம்.ஆர்.எம்.முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ. மூமீன் .சிறப்பு அதிதியாக கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீம், மற்றும் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர் உட்பட கலந்து கொண்டார்.
இக் கல்லூரியில் இருந்து சுமார் 126 மாணவர்கள் இம்முறை க.பொ.த உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றி வெளியேறவுள்ளனர்.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
(ஏ.எம்.ஏ.பரீத்)