மஹிந்தவுக்கு எதிராக இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்”, “அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்” என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(சு)