ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினை ஆதரித்து நேற்றைய தினம் (04) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவருமான வை.எல்.சுலைமாலெவ்வையின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரசின் தலைவரும், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அப்துல் மஜீத், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.பாரிஸ், அமைச்சரின் இணைப்பதிகாரி எம்.இசட்.எம். முனீர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் பி.உமர்கத்தா ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதேவேளை ஜனாதிபதியை ஆதரித்து நிந்தவூரில் நடாந்த முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
-சுலைமான் ராபி-


