திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் ஒருவரின் குழுவை தடுத்து நிறுத்த முனைந்த தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அமைப்பு.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த அமைச்சரும் அவரது செயலாளரும் தொடர்புபட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதன் மூலம் அராஜகமான தேர்தலை நடாத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முன்னெடுப்பின் ஒரு அங்கமாகவே இச்சம்பவம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)