(கே.ஏ.ஹமீட்)
முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கிறது, ஆனால் அரசியல்வாதிகளோ அவை அனைத்தையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பது தான் சம்மாந்துறை பிரதேச நில அளவை காரியாலயம். இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில் பிரதேச நில அளவையலர்களின் பிரத்தியேக முயற்சியில் கட்டப்பட்டு 2017. 03. 17 ம் திகதி அன்று நில அளவை கண்காணிப்பாளர் எம்.டி. றபீக் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை, குறித்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும், அவர் சார்ந்த கட்சியின் தலைவரான அமைச்சரும் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களினால் மீண்டும் திறப்பதற்கான முஸ்திரிபுகளை செய்து வருவதாக நம்பரமான தகவல் வெளியாகி உள்ளது.
எம் சமுகத்தின் எத்தனையோ உரிமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் கிடக்க தாங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஏற்கனவே திறந்து வைக்கப் பட்ட கட்டிடத்தை மீண்டும் திறக்க விரயமாக்கும் நேரத்தை மக்கள் குறைகளை நிவர்த்திக்க ஏன் செலவழிக்க கூடாது என சம்மந்தப் பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.