Latest News
    Post views-

    இறக்காமத்தில் தொடரும் புத்தகுருமாரர்களின் அத்துமீறல் - களத்திற்கு அமைச்சர் நஸீர் விஜயம்



    சப்னி அஹமட்-

    டந்த இரு தினங்களாக இறக்காமம் மாயக்கல்லி சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்ததுடன் புத்தசமயம் தொடர்பான கட்டிடமொன்றை நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர். இது தொடர்பாக நேற்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது..எனினும் நிறுத்தப்படமால் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று அங்கு கூடிய பிரதேச மக்கள் அவ் குழுவினறுக்கு பாரிய எதிரப்பினை தெரிவித்ததோடு உடனடியாக நிர்மாணப்பனிகளை நிறுத்துமாறு கூறியும் தமது நியாய பூர்வமான கண்டனத்தை தெரிவித்தனர். 

    இச்செய்தி அறிந்தவுடன் உடனடியாக அவ்விடத்தில் பிரசன்னமான கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து இதற்கான தீர்வினை பெறும் நோக்கில் உரியவர்களின் பேசி குறித்த விவகாரம் தொடர்பாகவும் ஆராய்ப்பட்டதுடன் பொலிஸ் பொருப்பதிகாரிகளுடனும் பேசப்பட்டதுன் இது குறித்த உரிய அரசியல் பிரமுகர்களுக்கும் அறிவிக்கப்பட்டு இதை நிறுத்துவது தொடர்பாகவும் அமைச்சரினால் பேசப்பட்டது. 

    சம்பவ இடத்தில் அரசியல் பிரதிநிதிகளான ஆரிப் சம்சுடீன், உலமாக்கள் சட்டத்தரணிகள் இளைஞர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து இவ் அத்துமீறல் நடவடிக்கை தொடர்பான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இதனை உடன் தீர்வினை பெறும்பொருட்டு இன்று தமனை பொலிஸ் நிலையத்தில் சம்பந்தபட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டது. 

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்