Latest News
    Post views-

    இலங்கை நெய்னார் நினைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும்


    இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தினால் இலங்கை நெய்னார் நினைவு தின விழா ஒன்றை விரைவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது.

    அ.இ.அதிமுக மாநில செயலாளர். MGR மன்ற தலைவர். மற்றும் அகில இலங்கை அம்மா பேரவை தலைவராகவும், சமூக மற்றும் அரசியல் சேவையாளரும். இலங்கை இந்திய உறவு பாலமாகவும் விளங்கிய மர்ஹூம் இலங்கை நெய்னார் பற்றிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

    அவரது உற்ற நண்பர்கள் நலன்விரும்பிகள், சமகாலத்தவர்கள் மற்றும் அவரது சேவைப் பயனாளிகள் ஆகியோரது அன்னாரைப் பற்றி நினைவுகள், பகிரப்பட வேண்டிய தகவல்கள் மற்றும் நன்றியறிதல்கள் ஆகியன அடங்கியதாக இம்மலர் தொகுக்கப்படவுள்ளது. 

    அன்னாருடன் ஏதாவதொரு வகையில் தொடர்புபட்டிருந்தவர்கள் உங்களது அனுபவ பகிர்வு, அவரைப்பற்றிய உங்கள் எண்ணங்கள கருத்துக்கள், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளக் கோருகிறோம். 

    அத்துடன் மர்கூம் இலங்கை நெய்னார் அவர்களுடன் இணைந்து நீங்கள் எடுத்த புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள் மற்றும் எதாவது ஒரு அடையாள சின்னம் இருக்குமாயின் அவற்றின் பிரதிகள், புகைப்பட பிரதிகளையும் வரும் மே மாதம் இறுதிக்குள் தந்துதவுமாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். 

    விழா மலர் பூர்த்தியானதும் விழாவுக்குரிய திகதி தீர்மானிக்கப்பட்டு சகலருக்கும் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தொடர்புகளுக்கு
    Mobile: 0772629292
    Whatsup/viber : +94 772629292
    E mail: nainarimran@gmail.com
     

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்