Latest News
    Post views-

    காந்தி பூங்காவில் போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளுடன் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சந்திப்பு

    மட்டக்களப்பில் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் காந்தி பூங்காவில் நடைபெற்றுவரும் வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்ட களத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2017.02.25ஆந்திகதி-சனிக்கிழமை காலை நேரடியாக சென்று சந்தித்தார்.

    இதன்போது பட்டதாரி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதிலளித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் “இந்த நல்லாட்சி அரசாங்கமானது பதவி ஏற்பதற்கு முன்னர் பத்து இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதியளித்திருந்த போதிலும் ஆட்சி ஏற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை காலமும் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றவில்லை.

    இந்த நாட்டினுடைய நிலைமையினை அறிந்திருந்த நிலையிலையே நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்றிருந்த போதும் கடந்த அரசாங்கம் விட்டுச்சென்ற பிழைகளின் காரணமாகவே இதுவரை காலமும் எமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று காரணம் கூறி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பிற்போடுவது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

    வேலையில்லாப் பட்டதாரிகள் விடயத்தில் நாங்கள் மாகாண சபை மூலமாக முடியுமான அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றோம். மாகாண சபையினால் வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.

    அந்தவகையில் கடந்த வருடம் நாங்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை இனங்கண்டு அவற்றை நிரப்புவதற்குரிய அனுமதியை வழங்கி வைக்குமாறு மத்திய அரசாங்கத்தை கேட்டிருந்த போதிலும் ஆயிரத்து இருநூறு வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாத்திரமே மத்திய அரசாங்கத்தினால் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

    எனவே எமது மாகாணத்திலுள்ள அரச துறையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய அனைத்து விதமான முயற்சிகளையும் நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு யுத்த காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியினை கற்று இன்று வேலையில்லாப் பட்டதாரிகளாக இருக்கக்கூடிய இந்த மாணவர்களின் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தங்களாலான முற்று முழுதான ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளோம்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

    இதன்போது பட்டதாரி மாணவர்களினால் ஐந்து நாட்களாக நாங்கள் இந்த போராட்டத்தினை நடாத்தி வருவதாகவும் இன்றுவரை எங்களின் குறைகளை கேட்டறிவதற்காக எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதிகளும் நேரில் வரவில்லை என்றும் முதலாவது முஸ்லிம் பிரதிநிதியாக நீங்கள் எங்கள் குறைகளை கேட்டறிவதற்கு வருகை தந்துள்ளதாகவும் பட்டாதாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சத்தியாக்கிரக போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்றும் பட்டதாரிகள் சார்பாக அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பையேற்று இப்போராட்டத்தில் தானும் கலந்துகொள்வதாக வாக்குறுதியளித்தார். மேலும் இதன்போது வேலையில்லாப் பட்டதாரிகளின் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

    வீடியோ... https://youtu.be/gBF6QdqulfQ

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்