கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழா சம்மந்தமாக பழைய மாணவர் சங்க நிருவாகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று 2017.02.24ஆந்திகதி - வெள்ளிக்கிழமை (இன்று) இஷாத் தொழுகையின் பின் பாடசாலையயின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதோடு, இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் 2017.02.27ஆந்திகதி-திங்கட்கிழமை இஷாத் தொழுகையின் பின் பதுரியா, மாஞ்சோலை மற்றும் மீராவோடை போன்ற பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களை சந்திப்பது என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.