Latest News
    Post views-

    மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பிரதமர் ரணில் அவா்களை சந்திக்கிறார் பிரதியமைச்சா் அமீா் அலி

    மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி இன்று (24.02.2017) நேரில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருத்தார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இச்சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களின் இல்லத்தில் இடம் பெற்றது.

    இச்சந்திப்பின் போது பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தொடர்ந்து வரும் வேலையற்ற பட்டதாரிகள் விடயம் தொடர்பில் அவசர நிரந்தர தீர்வினை பெற்று தருமாறு பிரதமரிடம் வேண்டுகோள்விடுத்தார். 

    இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதமர் எதிர்வரும் நாட்களில் இதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக பிரதியமைச்சா் அமீா் அலி அவா்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடுத்த கட்ட பேச்சு வாத்தை ஒன்று ஒர் இரு நாட்களில் இடம் பெறவுள்ளதாகவும் பிரதியமைச்சா் மேலும் கருத்து தெரிவித்தார்.

    இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை ஒன்றினை நடாத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்னம் அவா்களும் பிரதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருத்தமை குறிப்பிடத்தக்கது. 


    இச்சந்திப்பு தொடர்பாக பிரதியமைச்சா் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்னம் அவா்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவா் ரீ.கிஸ்காந் அவா்களுக்கும் தொலை பேசியில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் இவ்வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்கு தம்மால் முடியுமான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருதாகவும் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி நம்பிக்கை தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்