தந்தை கூலி வேலை செய்தே என்னை படிப்பித்தார் எனது வாழ்வில் நான் 1500 ரூபாவுக்கு மேல் ஒரு கிட் வாங்கியது கிடையாது என கல்விப் பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் உயிரியல் முறைமை தொழிநுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தையும் பெற்று சாதணை படைத்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவி ஐ.பாத்திமா அரூஸா தெரிவித்தார்.அன்மையில் வெளி வந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி ஓட்டமாவடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஓட்டமாவடி 1யைச் சேர்ந்த மாணவி இல்யாஸ் பாத்திமா அரூஸா கல்விப் பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் உயிரியல் முறைமை தொழிநுட்ப பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தையும் பெற்றார்.
இவரது இந்த சாதனை பற்றி அவரிடம் விணவியபோது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் எனது தந்தையின் பெயர் நூகுலெவ்வை இல்யாஸ் நாங்கள் குடும்பத்தில் இருபிள்ளைகள் எனது சகோதரர் திருமணமகி விட்டார்.
எனது தந்தை நாளார்ந்தம் கூலி வேலை செய்பவர். அவர் நாளார்ந்தம் கூலி வேலை செய்து கொண்டு வரும் சொற்பமான அந்த வருமானத்தைக் கொண்டே என்னையும் படிப்பித்தார்.
தந்தை கொண்டு வரும் அந்த சொற்ப பணத்தினை எனது தாய் போதுமாக்கி கொள்வார். இந்த நிலையில் தான் என்னையும் படிப்பித்தார்கள்.
கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் 8ஏ சித்திகளையும் 1சி சித்தியையும் பெற்றிருந்தேன்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞான உயிரியல் பிரிவில் நான் கல்வி கற்க ஆசைப்பட்டாலும் நான் அதில் படிப்பதற்கு எனது தாய் தந்தையிடம் பணமிருக்க வில்லை. எனினும் பின்னர் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் ஒரு தவணை வரைக்கும் கல்வி கற்றேன். பின்னர் அந்த பிரிவில் பாடங்களை மணணம் இடுவது கஸ்டமாக இருந்ததால் ஒரு வருடத்திக் பின்னர் நான் செயல்முறையுடன் கூடிய உயிரியல் முறைமை தொழிநுட்ப பிரிவிவை தேர்ந்தெடுத்து ஓட்டமாவடி மத்திய கல்லூhயில் படித்தேன். எனக்கு விளங்காத விடயங்களை ஆசிரியர்களிடம் கேட்டு படித்தேன்.
எனக்கு ஏறாவூரில் இருந்து ஆசிரியர் நாசர் காலையில் நேரகாலத்தோடு எனது பாடசாலைக்கு வந்து எனக்கு படிப்பிப்பார். அவரை எனது வாழ்வில் என்றும் மறக்கமுடியாது.
அதே போன்று தொழிநுட்ப துறையில் கற்றுத்தந்த நிஸா மற்றும் சோபனா மற்றும் சுமைறா ஆசிரியைகள் மேலும் பல ஆசிரியர்கள் அதே போன்று எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் ஜுனைட், தற்போதைய அதிபர் ஹலீம் இஸ்ஹாக் ஆகியோரையும் நன்றியுடன் நான் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றேன்.
நான் கல்வி கற்ற அந்த உயிரியல் முறைமை தொழிநுட்ப பிரிவில் தகவல் தொழிநுட்பமும் ஒரு பாடமாகும். அந்த பாடத்திற்கு எனக்கு ஒரு கணணி தேவைப்பட்டது. ஆனால் அந்தக் கணணியை வாங்குவதற்கு எனது பெற்றோரிடத்தில் வசதி வாய்ப்புக்கள் இருக்கவில்லை. அதனால் நான் பெரும் சிரமங்களை சந்தித்ததுடன் வீட்டிலிருந்து கணணி செயன் முறை பயிற்சி செய்ய வேண்டிய பயிற்சிகளைக் கூட நான் பாடசாலையிலிருந்த கணணியிலேயே பயிற்சிகளை செய்தேன்.
பரீட்சை நேரத்தில் எனது நன்பி சினீறாவின் வீட்டில் தங்கியிருந்து அவவின் கணணியில் பயிற்சிகளை செய்தேன் அதே போன்று சப்சாத் எனும் ஒரு சகோதரர் பல்ககை;கழகத்திலிருந்து வந்து பாடங்களை படித்து தந்தார். அவர் எந்தவொரு பிரதி பலனையும் எதிர்பாராமல் எமக்கு படிப்பித்தார்.
பாடசாலையில் அல்லது குடும்பத்தவர்களிடத்தில் எனது குடும்ப நிலைமையை கூறி ஒரு கணணி இயந்திரத்தை அவர்களிடம் வாங்குவதற்கு நான் விரும்பியிருக்க வில்லை.
எனது குடும்ப நிலையை மற்றவர்களிடம் கூறி எனது தாய் தந்தையரை நான் பலவீனப்படுத்த நினைக்காததால் நான் யாரிடத்திலும் எனது நிலையை எனது குடும்ப நிலையை கூற விரும்ப வில்லை.
இந்த நிலையில் எனது நிலையை அறிந்த எனது ஒன்று விட்ட சகோதரர் ஒருவர் எனக்கு ஒரு கையடக்க தொலைபேசியை ஒரு வருடத்திற்கு முன்னர் வாங்கி தந்தார். அந்த கையடக்க தொலை பேசியை எனது படிப்புக்காக பயன் படுத்தினேன்.
எனக்கு தகவல் தொழி நுட்பம் மற்றும் ஏனைய பாடங்களையும் இணையத்தின் மூலம் அந்த கையடக்க தொலைபேசியில் படிப்பதற்கு அது பெரிதும் உதவியாக இருந்தது.
ஒரு நாளும் அந்த கையடக்க தொலைபேசியை நான் சமூக வளைத்தளங்கள் பார்ப்பதற்காக பயன் படுத்தியது கிடையாது. சமூக வளைத்தங்களை பார்ப்பதற்கு எனக்கு ஆர்வமிருக்கவுமில்லை. எனது முழுக்கவனமும் நான் சார்ந்த படிப்பில் முன்னேற வேண்டும் என்பதேயாகும்.
அதனால் நான் இலக்குடன் கல்வி கற்றேன். இறைவனின் கிருபையினால் எனது பெற்றாரின் உதவியுடன் இன்று இந்த பெறு பேற்றை பெற முடிந்தது.
எனது குடும்பத்தின் நிலைமையை அறிந்து நான் நடந்து கொள்வேன் எனது பாடசாலை வாழ்க்கையில் அங்கு தரும் வெள்ளை சீருடை துணியை பாடசாலை ஆடையை தைத்து எடுத்து போடுவேன். 1500 ரூபாவுக்கு மேல் ஒரு கிட் வாங்கியது கிடையாது.
எனது தாய் தந்தை குடும்பம் ஆகியோர் கல்விச் சூழலில் இல்லாவிட்டாலும் கூட எனக்கு படிப்பித்த ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தார்கள். படிக்க தூண்டினார்கள்.
எனவே ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் போது அவர்களுக்கு வழிகாட்டும் போது மாணவர்கள் முன்னேற்றமடைய வழி இருக்கின்றது என்பதை நான் கூற விரும்புகின்றேன். ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்ததால் தான் நான் இந்த பெறு பேற்றை பெறமுடிந்தது.
இன்று நான் எடுத்த பெறுபேற்றினால்; எனது பெற்றோரும் எனது குடும்பமும் எனது பாடசாலையும் எனது ஊரான ஓட்டமாவடியும் பெருமைகின்றது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.
எனவே எதிர்காலத்தில் மாணவர்கள் கல்வியில் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை எனது அனுபவமாகவும் ஆலோசனையாக தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.