Latest News
    Post views-

    மீராவோடை சூப்பர் சலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் பொதுச் சபைக்கூட்டமும் நிருவாகத் தெரிவும்

    தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டதரணி டபிள்யு.ஜீ.எஸ். எரந்திக அவர்களின் தலைமையின் கீழ் “கோப்” 2017ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழக பதிவுகள் மற்றும் புதிப்பித்தல் வேலைத்திட்டம் நாடு பூராகவுமுள்ள 344 பிரதேச செயலக பிரிவுகளிலும் பதிவு செய்து கொள்ளப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச இளைஞர் கழகங்களின் எற்பாட்டில் “கோப்” 2017ஆம் ஆண்டுகளுக்கான பதிவுகளை மேற்கொள்கின்றது.

    மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் சூப்பர் சலஞ்சர்ஸ் இளைஞர் கழக புதிய நிருவாக தெரிவானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம். ரியாத் அவர்களின் வழிகாட்டலில் கழக தலைவர் பி.எம். பஸ்லூன் தலைமையில் 2017.01.12ஆந்திகதி - வியாழக்கிழமை மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக்கழக காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 2017ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. 

    புதிய நிருவாக விபரம். 
    தலைவர் – எஸ்.எம். நப்ராஸ்
    உப தலைவர் – எம்.யூ. பர்சான்
    செயலாளர் – எ.ஜெ. முபாஸ்
    பொருளாளர் – எம். மிஸ்வர்
    உப செயலாளர் – எ.ஜெ. ஹாரிஸ்
    அமைப்பாளர் – எம்.கே. பர்ஹான் 
    ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்