இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலே காரணம் என சிரியா குற்றம் சாட்டியுள்ளது.
குண்டு வெடிப்புகள் காரணமாக தலைநகரின் தென்மேற்குப் பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
கடந்த மாதம் மெஸ்ஸே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரிய அதிகாரிகள் இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், இஸ்ரேல் எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.