மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தனி ஒருவன். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கதையை இயக்குநர் மோகன் ராஜா தயார் செய்து விட்டதாகவும் இப்படம் நடிகர் ஜெயம் ரவியின் 25-வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.