லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்ட அன்று இரவு பொலிஸ் சாவடியில் சிலருடன் இணைந்து மதுபானம் அருந்தியதாக, கூறப்படும், பொலிஸ் மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாத்தளை உதவிப் பொலிஸ் அதிகாரி என்.ஜனக் வீரசிங்கவால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் உப பொலிஸ் பரிசோதகர் மஹேஸ் பிரியங்க எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 13ம் திகதி இரவு லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த ஆயுதங்கள் சில கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பொலிஸ் சாவடியில் இருந்து சிலர் மதுபானம் அருந்தியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதேவேளை, லக்கல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த கொள்ளை தொடர்பில், தற்போது கான்ஸ்டபில் ஒருவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஆயுதங்களை கொள்ளையிட்ட நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.