Latest News
    Post views-

    பொன்சேக்காவை சுட்டுக்கொல்ல, உத்தரவிட்ட மஹிந்த

    சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தம்மை சுட்டுக் கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகைகயில்,

    2010ம் ஆண்டில் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடமும் கோரியிருந்தேன். எனினும் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அதற்கு அனுமதியளிக்கவில்லை.

    நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை படைகளின் சேனாதிபதி அங்கீகரிக்கவில்லை என்றால் அது குறித்து கேள்வி எழுப்ப மஹிந்தவிற்கு உரிமையில்லை.

    2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 10 நிமிடங்களில் எனது பாதுகாப்பு நீக்கப்பட்டது. கடுமையான பயங்கரவாதிகளுடன் என்னை சிறையில் அடைத்தார்கள்.

    என்னை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பிற்கு இரண்டு ரீ56 ரக துப்பாக்கிகளே வழங்கப்பட்டன, 6 சிறைச்சாலை உத்தியோகத்தர்களே பாதுகாப்பு வழங்கினர்.

    நான் தப்பிச் செல்ல முயற்சித்தால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

    பயங்கரவாதிகளுடன் ஒன்றாக பஸ்ஸில் சிறைச்சாலை செல்ல நேர்ந்தது. இந்த வகையிலேயே இராணுவத் தளபதியை அவர்கள் கவனித்தார்கள்.

    இவ்வாறான நபர் ஒருவர் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோர அருகதையற்றவர். தற்போது எனக்கு 15 பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்பு வழங்குகின்றனர்.

    போரைச் செய்த இராணுவத் தளபதிக்கு 15 பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு போதுமானது என்றால், போர் இடம்பெற்ற காலத்தில் பதவி வகித்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 200 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் இருப்பதில் சிக்கல் இருக்க முடியாது.

    அன்று சரத் பொன்சேகாவிற்கு எத்தனை பேர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென தீர்மானித்தது கோத்தபாய ராஜபக்சவேயாகும். ஜானக பெரேராவின் கொலைக்கு முழுமையாக முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமே பொறுப்பு சொல்ல வேண்டும்.

    போர் இடம்பெற்ற காலத்திலும் மஹிந்த ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை.

    இராணுவம் இன்றி தூக்கம் போகவில்லை என்றால், பொலிஸாருடன் வீதியில் இறங்கப் பயம் என்றால் முன்னாள் ஜனாதிபதி வீட்டில் இருக்க வேண்டியதுதான்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்