கிழக்கு மாகாணத்தில் சாரதி நியமனம்,; முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை
(எம்.ஜே.எம்.சஜீத்)
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்து எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை சில கேள்விகளை முன்வைக்கவுள்ளார்.
கிழக்கு மாகாண சபையினால் சாரதி பதவிகளுக்காக கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் பரீட்சை நடாத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் வாகன ஓட்டப் பயிற்சியும் நடாத்தப்பட்டு நேர்முகப் பரீட்சையும் நடாத்தப்பட்டது இதுதொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அறிவாரா?
கிழக்கு மாகாண சபையினால் சாரதி நியமனங்கள் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதனையும், சாரதி நியமனம் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும், மாவட்ட ரீதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவிப்பாரா?
கிழக்கு மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படும் திணைக்களங்களில் தற்போது சாரதி வெற்றிடங்கள் எத்தனை உள்ளன என்பதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண சபையில் தெரிவிக்க வேண்டும்? என முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்தே எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை மேற்குறித்த கேள்விகளை கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கேட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.