களுத்துறை கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு கடற்படையும் விமானபடையும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றன.
பேருவளையிலிருந்து கட்டுகுருந்த பகுதிக்கு மதவழிப்பாட்டிற்காக படகொன்றில் சென்றிகொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான படகில் பயணித்த மேலும் பலர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.