Latest News
    Post views-

    டேய் போட்டு பேசி ஜும் ஆ தொழுகைக்கு செல்ல‌ அனும‌தி ம‌றுக்கப்பட்ட சம்பவம் : உலமா கட்சி கண்டனம் ..


    திருக்கோவில் த‌மிழ் பாட‌சாலையில் க‌ல்வி க‌ற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிய‌ர் ஒருவ‌ருக்கு வெள்ளிக்கிழ‌மை ஜும் ஆ தொழுகைக்கு செல்ல‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஆசிரிய‌ரை அதிப‌ர் டேய் போட்டு பேசியிருப்ப‌தையும் உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.

    வ‌ட‌க்கும் கிழ‌க்கும் பிரிந்திருக்கையில் இவ்வாறான‌ இன‌வாத‌ம் இன்ன‌மும் இருக்கும் போது வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைந்தால் இன‌வாத‌ ஒடுக்குத‌ல் இதைவிட‌ அதிக‌மாக‌ இருக்கும் என்ப‌தை மிக‌ இல‌குவாக‌ புரியலாம்.

    மேற்ப‌டி முஸ்லிம் ஆசிரிய‌ர் ப‌ல‌ வ‌ருட‌மாக‌ மேற்ப‌டி பாட‌சாலையில் க‌ற்பித்து வ‌ருவ‌துட‌ன் முன்ன‌ர் இருந்த‌ அதிப‌ர்க‌ள் வெள்ளிக்கிழ‌மை தொழுகைக்கும் அனும‌தி வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌ர். புதிதாக‌ வ‌ந்த‌ அதிப‌ரே இன‌வாத‌மாக‌ செய‌ற்ப‌ட்ட‌தாக‌ உல‌மா க‌ட்சியிட‌ம் முறைப்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

    மேற்ப‌டி பாட‌சாலை மாகாண‌ ச‌பையின் கீழ் வ‌ருவ‌தால் இது விட‌ய‌த்தில் உட‌ன‌டியாக‌ முத‌ல‌மைச்ச‌ரும் க‌ல்வி அமைச்ச‌ரும் த‌லையிட்டு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் ஆசிரிய‌ருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்