(எம்.ஜே.எம்.சஜீத்)
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் 2016ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு ஜெனரட்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கும் ரூபா 01இலட்சம் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காசோலையும் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் தலமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.நஸீல் அஹமட், தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் இணைப்பாளருமான ஏ.பதுர்கான், பொத்துவில் பெரிய ஜும்மாப்பள்ளி வாயல் தலைவர் செயலாளர், ஜனாசா நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி கே.அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு நீண்ட காலத் தேவையாக இருந்த ஜெனரட்டர் தேவையை நிவர்த்தி செய்த கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வைக்கு பெரிய பள்ளிவாயல் செயலாளர் எஸ்.டீ.செய்னூலாப்தீன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.