தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியின் போது, விக்கெட் ஒன்றை கைப்பற்றிய இம்ரான் தாஹீர், மைதானத்தை சுற்றி ஓடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன்போது தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றிய போது, அதில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற பொப் பாடகர் ஒருவரின் உருவம் பெறிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன விதிகளின் படி, இது தவறாகும்.
வீரர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி மைதானத்தில் செயற்பட முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.
