அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் போகின்ற, வருகின்ற இடங்களை கண்காணிப்பதற்கும், அவர்கள் சந்திப்பவர்கள் யார் என்ற தகவல்களைப் பெறுவதற்கும் புலனாய்வுத் துறை அதிகாரிகளை நியமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்துக்கு வரவிருந்தவர்கள் யார் என்பதை நாம் அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டியதில்லையெனவும், அரசாங்கம் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்தே வைத்துள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.
இன்றைய நுகேகொடைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் யார் என ஊடகங்கள் அவரிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.