மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளுக்கான சரியான கூரை வசதிகள் கூட
இல்லாத நிலையில் மழைக் காலங்களில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து
வருகின்றனர்.
அரசாங்கத்தினூடாக எங்களால் முடியுமான
உதவிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் தேவைகளுடன் ஒப்பிடும்போது அது போதுமானதாக
இல்லை என்ற ஒரு குறைபாடு காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் இது விடயம் தொடர்பாக
கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது.
நாங்கள் தொடர்ச்சியாக மக்களினுடைய
வீடுகளுக்கு சென்று அவர்களினுடைய குறைகளை கேண்டரிந்து வருகின்றோம். தேவையுடைய
மக்களுக்கு மேலதிகமாக எங்களது சொந்த நிதிகளை பயன்படுத்தியும் முடியுமான உதவிகளை
வழங்கி வருகின்றோம். இருப்பினும் அத்தகைய தேவையுடைய மக்களில் குறிப்பிட்ட அளவானவர்களுக்கே
அரச நிதியூடாகவோ அல்லது எங்களது சொந்த நிதிகள் மூலமாகவோ உதவிகளை வழங்க முடியும்.
எனவே முடியுமான சகோதரர்கள் இத்தகைய உதவிகள்
தேவைப்படும் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு தங்களால்
முடியுமான தனிப்பட்ட உதவிகளை செய்யமுடியும். அல்லது எங்களிடம் இத்தகைய
உதவிகளுக்கான வேண்டுகோளினை விடுத்த அதிகமான சகோதர சகோதரிகளினுடைய விபரங்கள் உள்ளன.
நீங்கள் எங்களுடைய காரியாலயத்தை தொடர்புகொள்வதனூடாக உங்களால் முடியுமான சிறிய
சிறிய உதவிகளை வழங்குவதன் மூலம் பெரிய பலன்களை அடைந்து கொள்ள முடியும்.
ஆகவே முடியுமான சகோதரர்கள் இத்தகைய
மக்களுக்கு குறைந்த பட்சம் 10 கூரைத்தகடுகலையாவது வாங்கி ். கொடுப்பதன் மூலம் வறிய
நிலையிலுள்ள மக்கள் மழைக் காலங்களில் தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
என நம்புகின்றோம்