Latest News
    Post views-

    இமாம்கள் உரை நிகழ்த்தும் மிம்பர்களுக்கு இருக்கும் கௌரவமும் மதிப்பும் வேறு எந்தவொறு மேடைகளுக்கும் கிடையாது தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

    வாழைச்சேனை, குல்லியத்துந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் (2016.12.10 - ஆந்திகதி - சனிக்கிழமை) வழங்கி வைத்தார். இந்நிகழ்வானது அரபுக்கல்லூரியின் தலைவர் எம்.எல். ஹச்சி முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
    கல்லூரியின் சார்பாக நிருவாக சபை உறுப்பினர் மௌலவி. ஜூனைட் அவர்கள் இக்கல்லூரி 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் 195 பேரும் உலமாக்கள் 156 பேரும் இன்றுவரை பட்டம்பெற்று வெளிறேியுள்ளதாகவும் தற்பொழுது 229 மாணவர்கள் இக்கல்லூரியில் மார்க்கக்கல்வியினை கற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
    இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...

    சமூகத்தினுடைய வழிகாட்டிகளாக இருக்கின்ற உலமாக்கள் சமூகத்தில் நடைபெறுகின்ற அநியாயங்களை அக்கிரமங்களை சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கவேண்டும்.
    இமாம்கள் மிம்பர்களிலே நின்று சமூகத்தின் நலன்கருதி எவ்விடயத்தினையும் பேசும்போது அதனை எதிர்த்து நின்று கேவ்வி கேற்கக்கூடியவர்களாகவோ அல்லது அங்கு சொல்லப்படுகின்ற விடயங்களை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அமர்ந்திருப்பவர்கள் செவிமடுத்துதான் ஆகவேண்டும் அவ்வாறானதொரு சக்தியை அல்லாஹ் இந்த இமாம்களுக்கு வழங்கியுள்ளான்.

    இமாம்கள் உரை நிகழ்த்தும் மிம்பர்களுக்கு இருக்கும் கௌரவமும், மதிப்பும் வேறு எந்தவொறு மேடைகளுக்கும் இல்லை குறிப்பாக அது அரசியல் மேடையாக இருந்தாலும் கூட அவ்வாறு உருவாக்கப்பட்டு இருப்பவர்கள்தான் இந்த உலமாக்கள்.

    எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அதிகாரங்களை வைத்து எமது சமூகத்திற்கு சிறந்ததொரு சேவையினை வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாகும். இக்கல்லூரியில் மார்க்கக்கல்வியுடன் இணைந்ததாக கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுவதாக அறிந்தேன். அத்தோடு இம்முறை இக்கலூரியிலிருந்து 5 உலமாக்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்கின்ற செய்தியையும் அறிந்தேன். இப்பிரதேசத்தில் நான் இவ்வாறாக கேவ்விப்படும் கல்லூரி இருக்குமாக இருந்தால் இதுதான் முதலாவது கல்லூரியாகும்.

    ஆரம்பகாலத்தில் உலமாக்கள் தங்களுக்கென்று ஒரு தொழிலை பெற்றுக்கொள்வதற்காக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். ஆனால் இன்று இந்த நிலைமைய மாறி அவர்களும் ஒரு அரச தொழிலை பெற்றுக்கொள்வதற்கான நிலைமை மாறியுள்ளது.

    இப்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் பொருமையினை கடைப்பிடிக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் மற்றைய மாகாணங்களில் பெரும்பான்மை சமூகத்துடன் முஸ்லிம்கள் இணைந்ததாகவே வாழ்ந்து வருகின்றனர். எனவே ஏனைய பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் நிலைமையினையும் கருத்திற்கொண்டு நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக என தனதுரையில் தெரிவித்தார். 

    இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சயிது (பலாஹி), கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, மற்றும் கல்லூரியின் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
     
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்