அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளமை ஐரோப்பாவுக்கு ஆபத்தென எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Jean-Claude Juncker இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் வருகை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உறவுகளுக்கு "அடிப்படை மற்றும் கட்டமைப்புரீதியாக" பாதிப்பை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஐரோப்பா என்றால் என்ன? அது எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
லக்சம்பேர்கில் இடம்பெற்ற செயலமர்வில் இந்த விடயங்களை Juncker குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பிற்கு தெரியாத உலக சுற்றுலாக்களுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் வீணாகும் என ஆணையத் தலைவர் கணித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்துக்கள் முரண்பாடாக இருந்ததுடன் அமெரிக்க தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவின் பிரதான நகரங்கள் வன்முறை தேசமாக மாறியுள்ளது.