Latest News
    Post views-

    விபத்தில் கர்ப்பிணி பெண் மரணம்.

    அனா.
    வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை – ஜயந்தியாய என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (01.09.2016) மாலை இடம் பெற்றுள்ளது.

    பொலனறுவை மாவட்டத்தின் சேனபுர பகுதியில் இருந்து கர்ப்பிணித்தாயை வைத்திய பரிசோதனைக்காக ஓட்டமாவடியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்து விட்டு மீண்டும் சேனபுர பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பொலநறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலயே இச் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    விபத்தில் மரணமடைந்த சேனபுரயைச் சேர்ந்த கர்ப்பிணித்தாயான கயாத்து முகம்மது பௌசியா (வயது – 35) என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவருடன் பயனம் செய்த சேனபுரையைச் சேர்ந்த முஹம்மது சாலி பௌசியா (வயது – 43) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் முச்சக்கர வண்டியின் சாரதியான செயினால்ப்தீன் முகம்மது அசனார் (வயது – 36) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இவ் விபத்து சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்