-ஊடகவியளாலர் ஹஸ்பர்-
திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க கிளை தொண்டர்களும் லயனஸ் கழக தொண்டர்களும் இணைந்து நடாத்திய பேரணி ஒன்று நேற்று (12) போதைப் பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் திருகோணமலை பஸ் தரிப்பிட முன்றலில் இருந்து காலை9.15 க்கு ஆரம்பமாகியது இதில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான சுலோகத்தை ஏந்தி இப் பேரணி மிகவும் விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது இதற்கு வீதிப் போக்குவரத்து பொலிசார்களும் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது