Post views-

கிராம அதிகாரிக்கு செருப்பை கழற்றி கண்ணத்தில் அறைந்த பெண் கைது


-ஊடகவியளாலர் ஹஸ்பர்-

மூதுார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாபி நகர் கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம அதிகாரிக்கு இடது கண்ணத்தில் செறுப்பை கழற்றி அடித்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்(10) இடம் பெற்றுள்ளது

மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம அதிகாரியிடம் கைெயாப்பம் பெறுவதற்கு சென்ற வேளையில் அக்கிராம அதிகாரி மறுப்புத் தெரிவித்து கூறியதாவது தற்போது தான் நீங்கள் வெளிநாடு சென்று வந்து மூன்று மாதங்களாகின்றது உங்களுடைய கணவனை அழைத்து வாருங்கள் என்று கூற குறித்த பெண் பிரதம கிராம உத்தியோகத்தரிடம் முறையிட்டதன் பிற்பாடு அவர் கூறியதாவது இதனை உங்களது கிராம அதிகாரியிடம் பார்த்து கொள்ளுங்கள் என அவர் கூறினார் இதனையடுத்து பொது மக்களுக்கு மத்தியில் குறித்த பெண் கிராம அதிகாரிக்கு செறுப்பை கழற்றி கண்ணத்தில் அறைந்துள்ளார் கிராம அதிகாரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதுடன் பெண் மணி மூதுார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மூதுார் பொலிசார் தெரிவித்தனர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்