ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தனக்கு அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது. எனினும் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வயதெல்லையை அதிகரிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு தான் அனுப்பிய கடித்துக்கான பதிலிலேயே ஆளுநர் இந்த விடயத்தை தனக்கு தெரிவித்ததாக இம்ரான் MP தெரிவித்தார்.




