Latest News
    Post views-

    "புளொட்" வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இன்று சூரிச்சில் சிறப்பாக நடைபெற்ற பரீட்சைப் போட்டி..!

    எதிர்வரும் 10.07.2016 (ஞாயிற்றுக்கிழமை) சுவிஸ்லாந்தின் சூரிச்சில் நினைவு கூரப்படவுள்ள 27ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (03.07.2016) சுவிஸ், சூரிச் மாநிலத்தில் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் பரீட்சைப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

    மேற்படி பரீட்சைப் போட்டியினை "புளொட்" சுவிஸ்கிளைத் தோழர் ரஞ்சன் அவர்கள், அஞ்சலியுடன் ஆரம்பித்து வைத்து "மேற்படி பரீட்சையை நடாத்துவது" பற்றி உரையாற்றினார். இதன்போது அவர், "தாங்கள் எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும் அல்லாது மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவே இதனைச் செய்வதாக" குறிப்பிட்டுக் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து பரீட்சை போட்டிகள் நடைபெற்றன. மேற்படி பரீட்சைப் போட்டிகளில் தமிழ், டொச் மொழி, கணிதம், வர்ணம் தீட்டுதல் மற்றும் பொது அறிவுப்போட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

    மேற்படி பரீட்சைகளுக்கு திரு. நாகமுத்து செல்வராஜா மாஸ்ரர், தோழர் மார்க்கண்டு விஜயமனோகரன் (மனோ), தோழர் செல்லத்துரை சிவானந்தசோதி (சிவா), திருமதி. சந்திரா அரிராஜசிங்கம், திருமதி. கருணாகரன் தவச்செல்வி, திருமதி புஷ்பானந்தசர்மா வதனாம்பாள், திருமதி. வர்ணகுமாரன் நேசராணி, திருமதி. சிவானந்தசோதி நந்தினி, திருமதி. யோகேஸ்வரன் வதனா ஆகியோருடன் செல்வி. ஆர்த்திகா அரிராஜசிங்கம், செல்வி. சிவானந்தசோதி லக்க்ஷா ஆகியோரும் நடுநிலைமை மற்றும் மேற்பார்வையாளர்களாக பங்குபற்றி பல உதவிகளையும் புரிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

    அத்துடன் திரு. திருமதி. ஜெகநாதன், திரு.இரத்னகுமார், திரு.முருகதாஸ், திரு.அருளம்பலம் புவனேந்திரன் (புவி), திரு.யோகன், தோழர் .பாபு, தோழர்.பிரபா ஆகியோரும் தமது சரீர உதவிகளை வழங்கி, விழா சிறப்புற உதவி புரிந்து இருந்தனர். அதேபோல் இன்றைய மதிய போஷனத்தை திரு.லோகன் (முனியாண்டி விலாஸ்) அவர்கள் தந்து உதவியமைக்கும் எமது நன்றிகள் பல.
     
    இன்றையதினம் நடைபெற்ற மேற்படி பரீட்சைப் போட்டியைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10.07.2016) இதே மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் நினைவு கூரப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

    (**நாம் முன்னர் "வரசித்தி மஹால்"மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவித்திருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் மேற்படி சூரிச் அட்லிஸ்வில் மண்டபத்திலேயே "வீரமக்கள் தின" நிகழ்வும் நடைபெற உள்ளது என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம்.) 

    --தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ் கிளை--









  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்