தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரிவிர செய்தித்தால் ஆகியவற்றின் ஊடக அணுசரனையுடனும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களின் ஊடக மற்றும் தொலைத்தொடர்புத்துறை சார் அறிவினை பாடசாலை மட்டத்திலிருந்து விருத்தி செய்யும் நோக்கில் ஊடக பாசறை வேலைத்திட்டம் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.
நாடபூராக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் நடாத்தபட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி மூலமான முதலாவது வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்காக எதிர்வரும் 07.07.2016 அன்று அட்டன் நகரசபை மண்டபத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் ஊடக பயிற்சி வேலைத்திட்டத்தில் “தொலைதொடர்பு ஊடகங்களில் தமிழ் மொழிப்பிரயோகம்” மற்றும் “அறிவிப்புத்துறை” ஆகிய துறைசார் விரிவுறைகள் நிகழ்த்தப்படவுள்ளதும் குறிப்பிடதக்கது.
இலங்கையின் புகழ் பெற்ற ஊடகவியலாளர் மற்றும் அறிவிப்பாளர்களான திரு. சீத்தாராமன், கே.நாகபூசணி ஆகியோர்களின் விரிவுறைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.
அதனை தொடர்ந்து இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடக பிரிவு அறிவிப்பாளர் திரு.சிவராஜாவும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு -
நுவரெலியா மற்றும் மஸ்கெலியா தொகுதிக்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சதிஸ்குமார் - 0772542339
(க.கிஷாந்தன்)