மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படமாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைத்த ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கபட்டிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை, மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வெளித்திட்டங்களுக்கு ஆதரவாக இந்த வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளதாகவும், இவற்றில் பிரதானமான நிபந்தனையாக மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.