உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் வடமாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிடோரையும் சமந்தா பவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.