இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் ஏற்பாட்டு செய்யப்பட்ட அழகுக்கலை, சாதன நிலையம் நேற்று சனிக்கிழமை மாலை (21) அம்பாறை நகரில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கட்டளையிடும் அதிகாரி மேஜர் வர்ணகுல சூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா ரத்த பல்லேகம கலந்துகொண்டு இந்த அழகுக்கலை, சாதன நிலையத்தை திறந்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையத்தை திறந்து வைத்த பிரதம அதிதி அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த அழகுக்கலை, சாதன நிலையத்தினூடான தங்களின் அழகு ஆவலைகளை மிக குறைந்த விலையில் செய்துகொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வணிதா பிரிவின் தவிசாளர் லக்கி பல்லேகம மற்றும் சிவில் பாதுகாப்பு உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.