கம்பஹா பல்லேவெலயில் அபிவிருத்தி அலுவலராக இருக்கும் பெண் பட்டதாரி மற்றும் அவரின் சகோதரான சட்டத்துறை மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் பட்டதாரி, தமது 75 வயதான தாயின்மீது கொதித்த நீரை ஊற்றியமைக்காக இன்றைய தினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, இவரை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது அதனை தடுக்க முனைந்த குற்றத்துக்காகவே அவருடைய சகோதரரான சட்டத்துறை மாணவனும் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் காயங்களுக்கு உள்ளான தாய் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணை கைதுசெய்ய பொலிஸார் முற்பட்டவேளை, அவரும் சகோதரனும் அவர்களின் தந்தையை பணயக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டு தமது கைதை தவிர்க்க முயன்றுள்ளனர்.
எனினும் பொலிஸார் திட்டமிட்ட வகையில் அவர்களை கைதுசெய்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள், மனநோய் மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.