மட்/மம/ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் ஊட்டப் பாடசாலையான மட்/மம/பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் மாணவர்களின் தொகை அதிகரித்ததன் காரணமாக இடப்பற்றாக்குறை பிரச்சினையை மாணவர்களும், ஆசிரியர்களும் அனுபவித்தனர். கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இதனால் பெரும் இடைஞ்சல்கள் ஏற்பட்டன. பலதரப்பட்ட அரசியல் தலைவர்களிடம் இது சம்பந்தமாக முறையிட்டும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இதுவிடயமாக, கடைசியாக கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாபிஸ் நசீர்அஹமட் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தருவதாக வாக்களித்தார். அதுபோல அந்தப் பாடசாலைக்குத் தேவையான இரண்டுமாடிக் கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு ரூபா இரண்டு கோடி நிதியினை ஏற்பாடுசெய்து கொடுத்தார். இதனால் பாடசாலை நிருவாத்தினரும், மாணவர்களும், பொதுமக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கட்டிட நிர்மாண வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்து நிர்மாண வேலைகளையும் கௌரவ முதலமைச்சர் பார்வையிட்டார்.
விரைவில் இந்தக் கட்டிடம் திறந்துவைக்கப்படும்.