உலகப்புகழ் பெற்றதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான இத்தாலியின் சாய் கோபுரம் (பைஸா) மற்றும் பிரான்ஸின் ஈபில் கோபுரம் ஆகியன பற்றி நாம் கேள்வி பட்டிருந்தாலும் அவற்றை சென்று பார்க்க முடியாத குறையை நீக்கி தடைகளை தகர்த்து எரிந்து எங்களாலும் முடியும் என்று அழகிய முறையில் இவ்விரு கோபுரங்களை மற்றுமல்லாது பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டி அழகான முறையில் பழங்கால இல்லம் ஒன்றையும் தான் பாடசாலை மண்ணில் அமைத்து அலங்கரித்தனர் நிக/வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தினர்.
கமர் இல்லம் - ஈபில் கோபுரம்
சம்ஸ் இல்லம் - சாய் கோபுரம்
நஜ்ம் இல்லம் - பழங்கால வீடு
பல நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 6,7 ஆகிய திகதிகளில் இப்பாடசாலையில் நடைபெற்ற இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் போதே இவ்வழகிய இல்லங்கள் அமைக்கப்பட்டன.
இல்லங்கள் மற்றும் அல்லாமல் சிறப்பான முறையில் விளையாட்டு நிகழ்ச்சிகள், வினோத உடை நிகழ்ச்சிகள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டது அல்-இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலயம்.
பலரது பாராட்டுக்களை பெற்ற இவ் இல்ல விளையாட்டு போட்டியை விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர அவர்கள் தனது வாழ்த்துக்களால் மேலும் முக்கியத்துவப்படுத்தினார்.
இந்த இல்ல விளையாட்டு போட்டியை இவ்வாறு சிறப்பான முறையில் நடத்தி முடிக்க காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மேலும் இரவு, பகல் பாராது உழைத்த பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மற்றும் பழைய மாணவர்களுக்கும் அனைவருக்கும் பாடசாலை அதிபர் தன் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இவ் விளையாட்டு போட்டியை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி டிஜிடல் முறையில் புள்ளிகளையும் உடனுக்குடன் வழங்கி இவ் விளையாட்டு போட்டியை சர்வதேச தரத்தில் ஏற்பாடு செய்த பழைய மாணவர்களின் OBAAI அமைப்பிற்கு தனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் ஊர் மக்கள் தெரிவித்து இருந்தனர்.
(நிஜாம்)