முஸ்லிம் காங்கிரஸின் 27 ஆவது பேராளர் மாநாடு இன்று -12- நடைபெற்றது. நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் தவிசாளர் தெரிவு செய்யப்படாத நிலையில் இன்றைய போராளர் மாநாடு தவிசாளர் இன்றியே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு ஹசன் அலியின் வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், தவிசாளர் பதவியை ஏற்குமாறு ஹசன் அலியை விலயுறுத்திய போதும் அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரம் உள்ள செயலாளர் பதவியை ஹசன் அலிக்கு வழங்குவதாக முன்னர் ஹக்கீம், வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.