கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செயல்முறை பரீட்சை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளததாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் காலதாமதமாக கிடைக்கும் பட்சத்தில், அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.