(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை தருகிறேன் என்று கூறினார்கள் ஆனால் இதுவரை எனக்கு அதனைத் தரவில்லை.
இதன்காரணமாக இந்த விடயத்தை நான் மறந்து வருகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான எம்.ரீ. ஹஸன் அலி மெட்ரோ நியூஸுக்கு தெரிவித் தார்.
நேற்று (09) அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக முன்னர் வெளியாகிய தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை தருவதாகத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எனக்கு கூறியது.
ஆனால், இன்று வரை அவ்வாறான எந்த ஏற்பாடுகளும் நடைபெற்ற தாகத் தெரியவில்லை. இது தொடர்பில் அவர்களிடமிருந்து எவ்வித தகவல்களும் எனக்கு கிடைக்கவில்லை.
தற்போதைய தேசியப்பட்டியல் எம்.பியான எம்.எச். எம் சல்மான் இதுவரை தனது பதவியை இராஜினாமா செய்யவும் இல்லை.
எனவே, இது தொடர்பில் நீங்கள் நாடாளுமன்ற செயலாளர் நாய கத்தை தொடர்புகொண்டே அறிந்து கொள்ளுங்கள்.
தேசியப்பட்டியல் எம்.பி. என்ற விடயத்தை நான் இப்போது மறந்தே விட்டேன். இது தொடர்பில் கருத்துககள் தெரிவிக்கும்போது பலரும் பல கருத்துக்களை வெளியிட்டு என்னை சிக்கல் நிலைமைக்கு தள்ளி விட முயற்சிக்கின்றனர் என்றார்.
இது இவ்வாறிருக்க, இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் உயர்பீடச் செயலாளர் மன்சூர் ஏ காதரை தொடர்புகொண்டு கேட்டபோது ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி கொடுப்பது என்ற விடயம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் இன்று (நேற்று) தருவதாகவோ அல்லது காலக்கெடு விதி த்தோ நாம் எதனையும் கூறவில்லை. அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி எமது கட்சியின் பேரால் மாநாடும் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னராக ஹஸன் அலிக்கு எம்.பி. பதவி வழங்கப்படுமா என்பது தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது என தெரிவித்தார்.