மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவானது பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விடயங்களில் கவனம்செலுத்தி வருவதோடு, வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் பல வகையிலும் நிதியுதவிகளையும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்-மம-மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2017.01.23ஆந்திகதி - திங்கட்கிழமை பாடசாலையின் கேட்போர் கூடத்தில் எம். ஹனீபா ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் கல்விப்பிரிவின் தலைவர் ஏ.எம். பிர்னாஸ் ஆசிரியர், ஊடக இணைப்பாளர் எஸ்.எச். உஸைத், சமூக சேவைப் பிரிவின் தலைவர் எஸ்.எம். சிம்ஸான் மற்றும் அதிபர் சேவையில் சித்தி பெற்று பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றும் எம்.சீ. ஐயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.