மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் 208டீ செம்மண்ணோடை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மீள் குடியேற்ற கிராமமான கொண்டையன் கேணி கிராமத்திற்கான 250 மீட்டர் நீளமுடைய பள்ளிவாயல் பின் வீதிக்கான மின்சார இணைப்பினை 2,00000 ரூபா செலவில் தனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2017.01.10ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை (இன்று) பெற்றுக்கொடுத்தார்.
இவ்வீதிக்கான மின் இணைப்பினை பெறுவதற்கான வேலைகள் இலங்கை மின்சார சபையினால் இன்று மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்ற நிலையில் இக்கிராமத்து மக்கள் சார்பாக தங்களை நேரில் அழைத்து எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டுமென்று செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விடுத்த அழைப்பினையேற்று கொண்டையன் கேணி கிராமத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ்வீதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் விச ஜந்துக்களின் இன்னல்களுக்கு முகம்கொடுப்பதோடு, தங்களின் பிள்ளைகள் இரவு நேரங்களில் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்ட இருள் சூழ்ந்த இவ்வீதிக்கு மின்சார இணைப்பினை பெற்றுத்தந்தமைக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பாக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாக்குறுதியும் அல்லாஹ்வின் உதவியால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2016.09.18ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின் பேரில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் இக்கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.