கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கர்பலா அல்-மனார் பாடசாலைக்கு 65,000 ரூபா பெறுமதியான கணணிகளை வழங்கும் நிகழ்வு (02.12.2016 - வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு கணணிகளை வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் பதுருதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...
இத்தகைய எல்லைப்புற பாடசாலைகளில் கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் மிகவும் திறமையுள்ளவர்கள் என்பதனை எங்களால் கண்டு கொள்ள முடிகின்றது. இந்த வருடம் இப்பாடசாலையில் கல்விகற்ற 10 மாணவர்களில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ளனர். இது நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்திற்கு ஒப்பானதாகும்.
ஆகவே இத்தகைய திறமைமிக்க மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஒவ்வொன்றாக இனங்கண்டு அதற்கான தீர்வுகளை அவர்களுக்கு வழங்குவதோடு. இப்பாடசாலைக்கு மிகவும் தேவைபாடாகவுள்ள ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியாண்டு பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசில்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கி வைத்தார்.