ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய பயணத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவிற்கு இலங்கை ஜனாதிபதி பயணம் செய்தால் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மலேசிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு பயணம் செய்ய உத்தேசித்துள்ளார்.