Latest News
    Post views-

    சீனாவுடன் டிரம்ப் மோதல்! வர்த்தகப் போர் மூளும் அபாயம்

    அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தொடர்ச்சியாக சீனாவை தாக்கிப் பேசினார் டொனால்ட் டிரம்ப்.
    இந்நிலையில் பதவியேற்றவுடன் சீனாவை ”கள்ளத்திறமையுடன் பணமதிப்பை கையாளும் நாடு” என அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
    இன்று வெளியிட்டுள்ள டுவிட்டில், அமெரிக்க நிறுவனங்களை வர்த்தகப் போட்டியிலிருந்து விலக்க தங்கள் நாட்டு பணமதிப்பை குறைக்க நம்மிடம் சீனா கேட்டதா?
    நம் நாட்டிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பொருட்களுக்கு கடுமையாக வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு வரிவிதிப்பதில்லை.
    தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரிய ராணுவ அமைப்பை உருவாக்கி வருவது குறித்தெல்லாம் ‘சரியா’ என்று நம்மிடம் கேட்டனரா? இல்லை என்று தெரிவித்துள்ளார்.
    தைவான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றதால் சீனா கோபமாக உள்ளதாக தெரிகிறது, ஆனால் இது மரியாதை நிமித்தமான அழைப்பே என துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்