தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ வைத்தியச்சாலை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முன்னதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பியால் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தார். மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர்.
முன்னதாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்.22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பலோ முன் அதிமுகவினர் கூடியிருப்பதாக சற்று முன் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை முன் வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பிரினர் அனைவரும் உடனடியாக கடமைக்கு வருமாறு பணிக்கு சமூகமளிக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் சிபிசிஐடி, குற்றப்பிரிவு போலீஸ் உள்பட அனைவரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இதனை அடுத்து அசம்பாவித சம்பவங்களை நிகழாமல் இருக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து நகரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.